வியாழன், 9 அக்டோபர், 2014

ஆய கலைகள் 64 பற்றி தெரிந்து கொள்வோம்.


1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)
2. எழுத்தாற்றல் (லிகிதம்)
3. கணிதம்
4. மறைநூல் (வேதம்)
5. தொன்மம் (புராணம்)
6. இலக்கணம் (வியாகரணம்)
7. நயனூல் (நீதி சாத்திரம்)
8. கணியம் (சோதிட சாத்திரம்)
9. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்)
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

                                                                     ---நன்றி முகநூல்--- 

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

காலை எழுந்தவுடன்.......................

காலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது  விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள்  வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச்
 செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?

உடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்னைகள்கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். மேலும் 'ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும். முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே த‌விர, அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
தண்ணீர்
ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். சிலர், வெந்நீர் அருந்துவார்கள். ஆனால், குளிர்ந்த நீர் குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில், குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.
தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும். மேலும், இதனால் உடலின் ஒரு நாளைய வளர்சிதை மாற்றத்தில் 24 சதவிகிதம் அதிகரிக்கிறது. முக்கால் லிட்டர் நீரையும் முழுமையாகக் குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராகப் பிரித்துக் குடிக்கலாம்.
வெந்தயத் தண்ணீர்  
சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு நல்ல தடுப்பணை வெந்தயம். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும் அரு
மருந்தும் இதுதான். வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில்  ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது. வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். வெந்தயம், மோர் இரண்டுமே குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், உடனடியாகச் சளி பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் இந்த காம்பினேஷன் வயிற்றுப் போக்குக்கும் வழிவகுத்துவிடும் என்பதால் கவனம் தேவை.
அருகம்புல் சாறு  
அல்சருக்கு அருமருந்தே வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். ஆனால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி, நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் தாவரத்தின் இலை மற்றும் தண்டுப் பகுதியின் கலவைதான் இது. அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.
வெள்ளைப்பூசணி  சாறு
வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும். ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.
 இஞ்சிச் சாறு
இஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால், வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனப்்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
 நீராகாரம்
காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். இதனால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது. மோரில் உள்ள லாக்டோபேசில்லஸ் (றீணீநீtஷீதீணீநீவீறீறீus) என்னும் பாக்டீரியா, உடலுக்கு நன்மை செய்வதுடன், வயிற்றில் வைட்டமின்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.
நெல்லிக்காய்ச் சாறு
தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில், 'ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது. இதில், சிறிதளவே, அமிலத்தன்மை இருந்தாலும் எலுமிச்சை அளவுக்கு வலிமையான அமிலம் இல்லை. எல்லா வயதினரும், வெறும் வயிற்றில் தாராளமாகக் குடிக்கலாம்.

   இளநீர்
இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதுதான் என்றாலும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், தூங்கி எழுந்தவுடன் சற்று சூடாக இருக்கும் நம் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. மேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். எனவே, உணவு இடைவேளையில்தான் இளநீர் அருந்தவேண்டும். அதுவும் வெட்டிய உடன் இளநீரைக் குடித்துவிட வேண்டும், இல்லையெனில் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடும்.
எலுமிச்சைச் சாறு
பல் துலக்கியதும், எலுமிச்சைச் சாறுடன் தேன், வெந்நீர்் கலந்து ஒரே மூச்சில் குடிக்கும் டெக்னிக்தான், உடல் எடையைக் குறைக்கும் என்று பலரும் நினைக்கின்றனர்.  இதனால், எடை குறைந்தாலும் வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாறு அருந்துவது அவ்வளவு நல்லதல்ல. எலுமிச்சையில் அதிகமாக இருக்கும் சிட்ரிக் அமிலம், நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேர்ந்து அசிடிட்டியை அதிகரித்துவிடும். ஆனால் தேன் மற்றும் வெந்நீர் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் எடை குறைவதுடன், வயிற்றின் அமிலத் தன்மையும் சமன்செய்யப்படுகிறது. எனவே, எலுமிச்சை சேர்க்காமலேயே எளிதாக எடையைக் குறைக்கலாம்!
 பச்சை முட்டை
ஒல்லியாக இருப்பவர்கள், 'ஜிம்’ பாடியாக மாற ஈஸியான வழியைத் தேர்ந்தெடுப்பது, விடிகாலை வெறும் வயிற்றில் பச்சை முட்டைதான். உண்மையில் இது மிகப் பெரிய தவறு. பச்சை முட்டை செரிமானமாகக் குறைந்தது 8 மணி நேரமாவது ஆகும். இதனால், நம் வயிற்றில் உள்ள உள்ளுறு குடலுறிஞ்சிகளால், செலீனியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற நுண்சத்துகளை உறிஞ்ச முடிவது இல்லை. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் முட்டையில் உள்ள புரதமும் (வெள்ளைப்பகுதி) மஞ்சள் கருவும், காலையில் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேரும்போது வாயுத்தொல்லை ஏற்பட்டு, நாள் முழுவதும் மந்தமான உணர்வு ஏற்படுத்திவிடும். எனவே, வேகவைத்த முட்டையாக இருந்தாலும் காலை மற்றும் மதிய உணவின்போது மட்டுமே சாப்பிட வேண்டும்.  
                                                                                                            ----நன்றி ஆனந்த விகடன்------ 

சனி, 9 ஆகஸ்ட், 2014

இது உங்களுக்கான பக்கம் தான்

வாழ்க்கையில் ஒருநாள் என்பது அவ்வளவு முக்கியமானதா என கேட்பவரா நீங்கள்? இன்று ஒருநாள் போனால் என்ன, இன்னும் என் வாழ்நாளில் தான் ஆயிரகணக்கில் நாட்கள் உள்ளதே என ஒருநாளை சாதாரணமாக நினைப்பவரா? அப்படியென்றால் இது உங்களுக்கான பக்கம் தான்!!

<<<<<<கொஞ்சம் பெருசாதான் இருக்கும்>>>>>>>>>>>>>>>>


ஒருநாளை ஒரு நாள் என்று பார்க்காதீர்கள்! 24 மணி நேரம், 1140 நிமிடம், 86,400 நொடி இப்படி பார்த்து பழகுங்கள் எவ்வளவு பெரிதாக உள்ளது. இப்போது இதையே ஐந்து வருடங்கள் என்று பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு தலை சுற்றும்! ஆனால் இந்த ஐந்து வருடங்கள் சிறப்பாக இருக்க உங்களது ஒரு நாள் எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்தாலே போதும், நீங்கள் தினசரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில வழிகள் இதோ...

1. உங்கள் கனவுகளை நிறைவேற்றும் பயணத்தில் மகிழ்ச்சியை தேடி கொள்ளுங்கள்!!

உங்களை வாழ்க்கைக்கான திட்டத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள், அதற்குபதில் எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும், இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள். அப்போது தானாகவே இன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்துவிடும்.இன்று செய்ய வேண்டியதை சரியாக செய்யுங்கள் தனாக உங்கள் கனவு நிறைவேறும்.

2.இன்றைய நாளில் என்ன செய்தீர்கள் என்பதை எழுதி வைத்துக்கொள்ள பழகுங்கள்!

''ஒரு நாளின் முடிவில் நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்று எழுதி வைத்து பாருங்கள் அது இன்றைக்கு நீங்கள் உங்கள் நேரத்தை எப்படி செலவு செய்துள்ளீர்கள் என்பதை காட்டும். வெறும் 15 நிமிடங்கள் நீங்கள் செய்த வேலையை எழுதி வைப்பது உங்களுக்கு வேலை மீதான செயல்திறனை அதிகரிக்கும்!' இன்று எது நீங்கள் நினைத்து உங்கள் புத்தகத்தில் இடம்பெறவில்லையோ அதனை சரிசெய்தாலே போதும்!

3.தினமும் ஒரு புதிய, பழக்கமில்லாத நபரோடு பேசுங்கள்

''புதிய பழக்கமில்லாதவர்கள் என்பது புதிய வாய்ப்புகளுக்கு சமம். இந்த வாய்ப்புகள் புதிய நண்பர்கள், புதிய யோசனைகள் மற்றும் உங்களுக்குள் இருக்கும் பயத்தையும், கூச்சததையும் போக்குவதாகவும், புதிய தொழில் துவங்குவதற்கான கருவியாக இருக்கும். உங்கள் வட்டத்தை பெரிது படுத்திக்கொள்ள பழகிவிட்டால் அது உங்கள் வேலை,மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை முடிவு செய்யும்.அதனால் தினமும் ஒரு புதிய பழக்கமில்லாத மனிதரோடு பேசுங்கள்.

4. நன்றாக கவனிக்க பழகி கொள்ளுங்கள்!

மக்கள் தங்களை பற்றி பேசுவதை பெரிதும் விரும்புவார்கள். அதனால் அவர்கள் பேசுவதிலிருந்து உங்களுக்கு தேவையானதை பெற அவர்களை பேசவிட்டு கவனியுங்கள். இது போன்ற மனிதர்களின் அனுபவம் எப்போதும் நமக்கு கைகொடுக்கும் சிக்கலான சூழல்களில் அவர்கள் செய்த தவறை பற்றி கூறியிருப்பார்கள் அதை நாம் செய்யாமல் இருந்தாலே போதும் என்ற பாடத்தையாவது அது கற்றுக்கொடுக்கும்.

5.குறைந்த நேரத்தை மட்டும் வீணாக்குங்கள்!!

நேரத்தை வீணாக்காமல் நம்மால் வாழமுடியாது. ஆனால் நம்மால் குறைவான நேரத்தை வீணாக்க முடியும். வாழ்க்கை நாட்களால் உருவாக்கப்பட்டது, நாட்கள் நேரங்களாலும், நேரம் நிமிடங்களாலும் உருவாக்கப்பட்டவை. அதனால் நிமிடங்களை தாண்டி நாம் நொடியை மட்டும் வீணாக்கி கொள்ள கற்று கொள்ள வேண்டும்.இந்த விஷயத்தை நீங்கள் சரியாக கையாண்டால் உங்களால் வெற்றியை மட்டும் தான் பெறமுடியும்.

6. உங்கள் அனுபவங்களை திசை மாற்றி கொண்டே இருங்கள்.

உங்கள் அனுபவங்களை ஒரு விஷயத்தை நோக்கியே கொண்டு செல்லாதீர்கள்.. உங்கள் அனுபவங்களை திசை மாற்றி கொண்டே இருங்கள். உங்கள் அனுபவங்களை விரிவுபடுத்துங்கள். இது உங்களது புதுமையான ஐடியாக்களுக்கும், நல்ல முறையில் உங்களை மக்களோடு தொடார்புபடுத்திக்கொள்ள உதவும்.அந்த அனுபவத்தை உலகிற்கு பரிமாறுபவராக இருங்கள்: அது பலரை முட்டாள்தனத்திலிருந்து விடுவிக்கும்.ஒரு சிறந்த அனுபவம் நல்ல சிந்தனையாளனை உருவாகியே தீரும்!

7. அவமானத்தோடும், சந்தேகத்தோடும் வேலை பார்க்க பழகுங்கள்!!

அனைவருக்கும் ஏதோ ஒரு சூழலில் அவமானத்தையும், சந்தேகத்தையும் எதிர்கொண்டு இருப்பார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே இதை சமாளிக்க கற்றுக்கொண்டு இருப்பார்கள். இதனை சமாளிக்க பழகுங்கள். உங்கள் அவமானம் பாடத்தையும் கற்று கொடுக்கும்! உங்கள் மீதுள்ள சந்தேகம் உங்களை தெளிவு படுத்தும்.

8. வெளிச்சூழலுக்கு செல்லுங்கள்:

உள்ளேயே இருந்து வேலை பார்ப்பது எளிது. வெளிச்சூழலுக்கு செல்லுங்கள். மிக உயரமான பகுதிகளுக்கு சென்று வாருங்கள், உளவியலாலர்களை சந்தியுங்கள். அது உங்களுக்குள் உள்ள புதுமையற்ற சதாரண மனிதனை புதுமைபடுத்துவதுடன்,உங்கள் அழுத்தத்தை குறைக்க உதவும் கருவியாகவும் அமையும்.

9.உங்களைவிட வித்தியாசமானவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:

நீங்கள் சற்று தாராளமானவராக இருந்தால் வித்தியாசமான மனிதர்களின் நட்புக்குள் செல்லலாம். நீங்கள் நகரத்து எலியாக இருந்தால் நாட்டு எலியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இந்த தேடலில் நீங்கள் பல வித்தியாச மனிதர்களை அடையாளம் காட்டும். அவர்கள் மீதான புரிதல் மாறுபட்ட மனிதர்கள் உள்ள குழுவில் சரியான முடிவை எடுக்க பயனளிக்கும்.

10. குறைந்தபட்ச குறிக்கோள்களை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்:

ஒரு நாளைக்கு 15 பக்கங்கள் படிக்க வேண்டும், 20 புஷ்-அப்கள். இப்படி குறுகிய டார்கெட்டுகள் உங்களை பெரிய வேலைகளுக்கு பழக்கப்படுத்தும்! இந்த பயிற்சி பெரிய திட்டங்களை உடைத்து சிறிது சிறிதாக ஒரு நாளைக்கு எவ்வளவு என பிரித்துக் ஐந்து வருட திட்டத்தையும் ஒரு நாளைக்கு பிரித்து வெற்றியடைய உதவும்.

இன்னும் ஐந்து வருடம் கழித்து எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க தொடங்கிவிட்டால் இன்று உங்கள் வேலை என்னவெனில்......
உங்களுக்கான வேலை என்ன என்பதை இன்னோருவரை தீர்மானிக்க விடாமல் இருப்பது தான்!! இன்றைய நாளை உங்கள் பிடித்த மாதிரி செதுக்குங்கள் அது இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கைக்கு உதவும்

சமிபத்தில் என்னை பாதித்த நண்பரின்<அஹமது அலி> கவிதை......


சுகம் தொலைத்து 
சுகம் வாங்க வந்த 
அதி முட்டாள்கள்(நானும்) 

கானி நிலமோ 
கறவை மாடோ 
பெட்டிக் கடையோ 
எதுவோ ஒன்றுக்கு நாம் முதலாளி 
நம்ம ஊரில்.....

ஒன்றுமே இல்லாமல் இருந்தாலும்
வெட்டி ஆபீசர்களாய்
பந்தாவாய் வலம் வந்தோம்!

பெட்டிப் பாம்பாய்
நான்கு சுவற்றுக்குள்
முடங்கிப் போனோம் !

சுடச் சுட பரிமாறும்
அம்மாவின் சமையலில் தான்
எத்தனை குறைகளை
சொல்லியிருப்போம்.!

வெந்ததைத் தின்று
வேகாததையும் தின்று
நொந்த போது தெரிந்தது
அம்மாவின் சமையல் ருசி....

சவடால் பேச்சில்
சாதித்தவர்கள் நாம்
இங்கே எத்தனை சட்ட திட்டங்கள்
அத்தனையும் அழகாய் பின்பற்றுகிறோம்
ஓர் அடிமை போல் !

கோபம்
விருப்பு வெறுப்புகளை
கட்டுப் படுத்த
நன்றாகவே பழகிக் கொண்டோம் !

இளமையை இங்கே
கரைத்து விட்டு
முதுமையில் அங்கே
முடங்கப் போகிறோம் !

கரம் பிடித்தவளின் காதலையும்
கடல் தாண்டிய ஏக்கத்தை உணர்ந்தும்
கரை திரும்ப முடியா
அலைகளாய் .....

செல்லக் குழந்தையின்
மழலை மொழி கேட்க
நிமிடங்களை கணக்கிடும்
நிர்பந்தவாதிகளாய் .....

பெற்றோரின்
உடல் நலக் குறைவில்
உடனிருந்து பார்க்க முடியா
துர்பாக்கியசாலிகளாய் ....

உற்றவர், உறவினர்
மரணச் செய்தி கேட்டும்
விழியோரம் கண்ணீரை முட்டிக் கொண்டு
பணிக்கு செல்ல வேண்டிய
வேசதாரிகளாய் .....

சில வருடங்கள் கடந்து
ஊர் திரும்புகையில்
பணம் நம்மிடம் தாராளமாய் இருக்கும்
அதற்காக நாம் தொலைத்த
சுக துக்க உணர்வுகள்
ஏராளம்.. ஏராளம்......

சனி, 3 மே, 2014

உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?



Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச்
சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள்,,

நாம் இப்போது நாமலே எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்,,

உங்கள் pattern,password,pinஐ எடுக்க இரண்டு வழிகள் உள்ளன,,

1.)Google Account
2.)Wipe data(format,factory reset)

<<<<<<<>>>>>>

(பலர் இதற்கு internet connection தேவை என்று
நினைக்கின்றனர் ,,ஆனால் தேவை இல்லை !!)

* |STEP 1| *

உங்கள் pattern,password,pinஐ மூன்று முறை தவறாக போடுங்கள்…

* |STEP 2| *

கீழே “Forgot Pattern?” என்று வரும்,,அதை Select செய்யுங்கள் ,,
பின் உங்கள் Gmail Address ,Password ஆகியவற்றை type செய்து
Sign in கொடுங்கள் …

* |STEP 3| *

இப்போது உங்கள் புது pattern,password,pinஐ Set செய்து
கொள்ளுங்கள் ,,அவ்வளவுதான் !!

<<<<<<<<>>>>>>

1.)உங்கள் போனை switch off செய்யுங்கள

2.)off ஆனவுடன் power button +home button + volume up button ஆகியவற்றை சேர்த்து அழுத்துங்கள் …
((இது எல்லா போன்களில் வேலை செய்யாது,Googleலில் “how to go to recovery mode in “உங்கள் போன் மாடல்” என்று search செய்யுங்கள்))

3.)recovery modeல் touch screen வேலை செய்யாது,,volume button move செய்வதற்கு ,home button அல்லது power button select செய்வதற்கு …

4.)recovery modeல் “wipe data” optionஐ select செய்யுங்கள்,பின் yes select செய்யுங்கள்…

5.)இப்போது “reboot system now” optionஐ select செய்யுங்கள்….
******************
அவ்வளவுதான் !!!! எளிமையாக இருந்ததா?

(Visited 7,063 times, 3,106 visits today)

சனி, 29 மார்ச், 2014

நெகிழ்வு


மன்னவனை கண்டதினால்
மனமது நிலையில்லை
மாலைசூடும் நாள்வரை நானும் நானில்லை
நெகிழும் நாணலாய் நாணம் ஆட்கொல்ல

விழிநீர் சிந்தி விரட்டிய மோனம்
விடியும் பொழுதினை விழி மூடா பார்த்திருக்கு
தூரத்தே தெரியும் தூயவன் உள்ளம்
தூண்டில் போட்டு இழுக்குதோ என்னை
விழி வாள் கொண்டு இழுக்கவில்லை
விரட்டி நானும் செல்லவில்லை
இணைசொல்லா பாசமதை என்னுள்ளே விதைத்துவிட்டான்
இனைந்தே இருக்க இன்று இனையாதிருக்கின்றோம்
கண்ணிலே நான் சொல்லும் காதலை
கனவே நீ கொஞ்சம் கொண்டுசெல்
காத்திருக்கும் காளைக்கு
கன்னியவள் சேதி சொல்..
இறக்கை கட்டி பறக்கும் நெஞ்சம் நெகிழ
என்னமது மனதோடு நெகிழ
மன்னவன் நினைவில் நான் நெகிழ.
இப்போதோ மஞ்சத்தோடு என் நெகிழ்வு





திங்கள், 3 மார்ச், 2014

படித்ததில் என்னை பாதித்தது

அப்போது(சேட்டிலைட் டிவி எல்லாம் வருவதற்கு முன்னாடின்னு வச்சுக்கோங்களேன்!!!!)

எல்லாம் விடுமுறை என்றால் மனிதர்களை காணுதல், மனிதர்கள் கூடுதல், குடும்ப உறவுகள் சுற்றி அமர்ந்து பேசி சிரித்தல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந்து கேளிக்கை விளையாட்டுக்கள் விளையாடுதல் என்று ஓய்வு நேரம் மனிதக்கூட்டுகளாகவே கழியும்…
என் அம்மா இரவு 7மணிக்கு எல்லாம் சமையல் முடித்து வாசலுக்கு வருவது போலத்தான் எதிர்த்த வீட்டு அய்யர் வீட்டு அம்மாவும், சுகுணா அக்கா, வைதேகி அக்கா, கண்ணா அண்ணா, ஜெயா அக்கா, பக்கத்து விட்டு அருள் அண்ணன், இந்த பக்கத்து வீட்டு பாபு பய, கடைசி வீட்டு மீனா அக்கா, சுரேந்தர், டிரைவர் பையன் சிவா, டைப்பிஸ்ட் பையன் ரகு, இப்படி தெருவில் எல்லா பட்டாளங்களும் கொஞ்சம் சீனியராக இருக்கும் ஒரு அண்ணாவோ அக்காவோ வழிகாட்ட…விளையாட்டுக்கள் களை கட்டும்….
பாலம்மா, எங்க அம்மா, ஜோயல் அம்மா இன்னும் தெருவில் இருக்கும் எல்லா அம்மாக்களும் வாசலில் மாலை நேரத்தில் வரும் முல்லை பூவையோ அல்லது கொல்லையில் இருந்து பறித்த டிசம்பர் பூவையோ கட்டிக் கொண்டு ….ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அப்பாக்கள் எல்லாம் அமைதியாக திருச்சிராப்பள்ளி வானொலியையோ, இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் நிகழ்ச்சிகளையோ அல்லது விவித பாரதியையோ கேட்டுக் கொண்டும் ஏதேனும் பத்திரிக்கைகளை மேய்ந்து கொண்டோ, இரவு 8:40 தூர்தர்ஷன் செய்திகளுக்காக காத்துக் கொண்டோ இருப்பார்கள்….இல்லை கடைகளுக்குச் சென்று வார இறுதிக்குத் தேவையானவற்றை வாங்குவதற்கும், அல்லது பிள்ளைகளை கூப்பிட்டு வைத்துக் கொண்டு விளையாடுவதற்கும் தயாராகி இருப்பார்கள்…
எத்தனை விளையாட்டுக்கள் இருந்தனஅப்போது எல்லாம், குலை குலையா முந்திரிக்கா, கிளிக்கோடு, கல்லா மண்ணா, ஒளிஞ்சு பிடிச்சு விளையாடும் விளையாட்டு…..எவ்வளவு சந்தோசமாய் கண்ணாமூச்சி ரே…ரே காதடைபார் ரே என்று யாரோ ஒரு அண்ணாவோ அக்காவோ கண்ணை பொத்தி விட ஒவ்வொருத்தராய் கண்டு பிடித்து வர வேண்டும்….!
வீட்டு வாசலிலிருக்கும் 60 வால்ட் பல்ப் வெளிசத்தில் கிச்சுக் கிச்சு தாம்பலாம்….கிய்யான் கிய்யான் தாம்பலம் என்று மணலை குவித்து குச்சியை ஒளித்து வைத்து விளையாடுவோம். கால்களை நீட்டி எல்லோரும் உட்கார்ந்து கொண்டு அக்கா…அக்கா ஈர்வேலி (சீப்பு மாதிரி இருக்கும் தலையில் இருக்கும் ஈறினை எடுக்க மரத்தால் செய்யப்பட்ட ஒன்று ..பெரும்பாலும் எல்லோரின் வீட்டிலுமிருக்கும்)… என்று ஒரு விளையாட்டு…. என்று கேளிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை….

இன்று எங்கே தொலைந்து போனது அந்த கேளிக்கைகளும் சந்தோசங்களும்…?

                                           ---நன்றி முகநூல்---