புதன், 24 ஜூலை, 2013

விழிப்புணர்வு



குருடர்கள் அதிகமாக கீழே விழுவதில்லை..
ஏன்...????
கண்கள் இல்லையே என்ற விழிப்புணர்வு...

கண் பார்வை தெரிந்தவர்கள் தான்
அதிகமாக கீழே விழுகின்றார்கள்.....
ஏன்...???
பார்வை தான் இருக்கிறதே,
என்ற அலட்சிய போக்கு......

ஆக... விழுவதும்,,,, வீழாமல் இருப்பதும்...
கண்களை பொறுத்தது அல்ல.....
அது 
விழிப்புணர்வு
என்ற உணர்வை பொறுத்தது.

மனிதர்களிடம் தொலைந்து போன கருணை..

பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின் ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது.

இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது.
இறுதியில் நீண்ட நேர முயற்ச்சி பலனளிக்காது குட்டி இறக்க நேரிட்டது. இதைத் தாங்க முடியாத சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது.  
சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக்கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது… :( (