சனி, 29 மார்ச், 2014

நெகிழ்வு


மன்னவனை கண்டதினால்
மனமது நிலையில்லை
மாலைசூடும் நாள்வரை நானும் நானில்லை
நெகிழும் நாணலாய் நாணம் ஆட்கொல்ல

விழிநீர் சிந்தி விரட்டிய மோனம்
விடியும் பொழுதினை விழி மூடா பார்த்திருக்கு
தூரத்தே தெரியும் தூயவன் உள்ளம்
தூண்டில் போட்டு இழுக்குதோ என்னை
விழி வாள் கொண்டு இழுக்கவில்லை
விரட்டி நானும் செல்லவில்லை
இணைசொல்லா பாசமதை என்னுள்ளே விதைத்துவிட்டான்
இனைந்தே இருக்க இன்று இனையாதிருக்கின்றோம்
கண்ணிலே நான் சொல்லும் காதலை
கனவே நீ கொஞ்சம் கொண்டுசெல்
காத்திருக்கும் காளைக்கு
கன்னியவள் சேதி சொல்..
இறக்கை கட்டி பறக்கும் நெஞ்சம் நெகிழ
என்னமது மனதோடு நெகிழ
மன்னவன் நினைவில் நான் நெகிழ.
இப்போதோ மஞ்சத்தோடு என் நெகிழ்வு