செவ்வாய், 25 ஜூன், 2013

திருடனை எப்படியும் காப்பாற்றி விடுவது என்ற
உறுதியுடன், வக்கீல், சாட்சி சொல்ல வந்த
பெரியவரைக் குறுக்கு விசாரணை செய்தார்.

”உங்களுக்கு வயது எண்பது தாண்டியாச்சு… திருட்டு
நடந்ததோ இரவு இரண்டு மணிக்கு.. திருடியவனைப்
பார்த்ததாக சொல்றீங்க…
சரி.. ராத்திரியில் எவ்வளவு தூரத்தில் இருக்கிற
பொருளை உங்களால் பார்க்க முடியும்?”

கிழவர் நிதானமாக சொன்னார்:
”நிலாவையே பார்க்க முடியும்.. நிலா எவ்ளோ
தூரத்திலே இருக்கு..!”

நீதி: சிக்கலான கேள்விகள் கேட்டால், கேட்பவர் தான்
சிக்கிக் கொள்வார்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக