திங்கள், 25 நவம்பர், 2013

இந்தியாவின் 7 அதிசயங்கள்!


உலகின் 7 அதிசயங்களாக பைசா சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிசின் ஈஃபிள் டவர், சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசீயும், அமெரிக்காவின் எம்பெயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவை அறியப்படுகின்றன.
இவையெல்லாவற்றையும்விட உலகின் 8-வது அதிசயமாக உலக அழகி ஐஸ்வர்யாராயை நாம் எல்லோருக்கும் தெரியும்!!!
அதேவேளையில் இந்தியாவின் 7 அதிசயங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வதில் சாதாரணமாக எலோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும்.
எவையெல்லாம் இந்தியாவின் 7 அதிசயங்களாக பார்க்கப்படுகின்றன, அப்படி பார்க்கப்படும்படி என்ன அதிசயம் அவற்றில் காணப்படுகின்றன என்று பார்ப்போம்.

1.சிரபுஞ்சி வேர்ப்பாலம்


மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் காணப்படும் இந்த வேர்ப்பாலம் ரப்பர் மரத்தின் வேர்களால் உருவானது. மேகாலயாவின் பழங்குடியினரான ‘வார்-காசிஸ்’ மக்கள்தான் முதன் முதலில் இந்த வேர்ப்பாலத்தின் மூலம் ஆற்றை கடக்க ஆரம்பித்தனர். இதன் பின்னர் இப்பகுதி மக்கள் ரப்பர் மரங்களில் செயற்கையாக வேர்ப்பாலங்களை உருவாக்க தொடங்கினர். அதாவது பாக்கு மரத்தின் தடித்த பாகத்தை துளையிட்டு அதில் ரப்பர் மர வேர்களை நுழையச்செய்து அது அப்பக்கம் வளர்ந்து சென்ற பிறகு மண்ணுக்குள் செல்கிறது. இதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு பயணிக்க தகுதியான, உறுதியான வேர்ப்பாலமாக இது மாறிவிடும்.

2.மாமல்லபுரம் சமநிலை பாறை



மாமல்லபுரத்தில் காணப்படும் இந்த சமநிலை பாறை ‘கிருஷ்ணாவின் வெண்ணைப்பந்து’ என்று அழைக்கப்படுகிறது. பைசாவின் சாய்ந்த கோபுரம் போலவே எப்படா விழப்போகுது என்பது போன்றே தோற்றமளித்து கொண்டிருக்கிறது இந்தப் பாறை. இதே போன்ற பாறைகள் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரிலும், கன்ஹா தேசிய பூங்காவிலும் காணப்படுகின்றன

3.லொனார் விண்கல் பள்ளம்



லொனாரின் விண்கல் பள்ளம் தான் உலகிலேயே தீக்கல் பாறை வகைகளில் அமைந்த ஒரே உப்பு நீர் ஏரி ஆகும். அதோடு இந்த விண்கல் பள்ளம் 52,000 அண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டது என்பது இதன் கூடுதல் சிறப்பு. இங்கு மயில், வாத்து, ஆந்தை, சிவப்பு மூக்கு ஆள்காட்டி போன்ற பறவைகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல் லொனார் ஏரியே கவின் கொஞ்சும் காட்சிக்கு சொந்தமானது. நமது பிரபஞ்சத்தில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் குறித்து அறிய விரும்புபவர்களும், புவியியல் மற்றும் அறிவியல் மீது நாட்டம் கொண்ட பயணிகளும் வாழ்கையில் ஒருமுறையாவது கண்டிப்பாக லொனார் ஏரிக்கு வர வேண்டும்.

4.மேக்னடிக் ஹில்



உங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம். ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம். இந்த மேக்னடிக் ஹில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மாவட்ட தலைநகர் லே அருகே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மேக்னடிக் ஹில் கார் பயணம் செய்பவர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

6.மணிகரன் வெந்நீர் ஊற்றுகள்



மணிகரன் நகரில் உள்ள மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக திகழும் இந்த வெந்நீர் ஊற்றுகளில் ஒன்று ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாராவிலும் மற்றொன்று பார்வதி ஆற்றுப்பகுதியிலும் அமைந்துள்ளது. பார்வதி ஆற்றின் கரையிலுள்ள வெந்நீர் ஊற்று சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த ஊற்று நீரில் பல கதிரியக்க கனிமங்களும் இயற்கையான யுரேனியத் தாதும் கலந்திருப்பது பல ஆராய்ச்சிகளுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

7.அமர்நாத் பனிலிங்கம்



ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தென்பகுதியில் இமயமலையின் மீது 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் அமர்நாத் குகை அமைத்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலங்களில் பனிலிங்கத்தை தரிசிக்கலாம். அதாவது இயற்கையாக உருவாகும் பனிலிங்கமாக கருத்தப்படும் இது ஜூன் மாதம்உருவாகி ஆகஸ்ட் மாதத்தில் கரைந்துவிடும். இதனை தரிசிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் குகைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

புதன், 16 அக்டோபர், 2013

பயனுள்ள இணையதள முகவரிகள்

நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்


01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll
02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள முகவரி
http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி
http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி
http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி
http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி
http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி
http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி
http://www.indianembassy.org/
10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி
http://www.tnreginet.net/
11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி
http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
http://www.chennaicorporation.gov.in/
13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி
http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp
14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி
http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி
http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி
http://www.tamilnadutourism.org/

17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி
http://www.tneb.in/

வெள்ளி, 4 அக்டோபர், 2013

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?




1) கையெழுத்துப் போட்டுவிட்டுக்
கீழே சின்னக் கோடு போட்டால்...

தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால்,
கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்த
ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்
விவேகானந்தர், சச்சின், சாப்ளின்,
வின்ஃப்ரே.
.
2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள்
வைத்தால்...

ரொமான்டிக் பார்ட்டி .
உடை மாற்றுவதுபோலக் காதலன் /
காதலியை மாற்றுவீர்கள் .
மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள் .
அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.
.

3) கையெழுத்துக்குக்
கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...

கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .
பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்
பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.
டாக்டர் விக்ரம் சாராபாய்.
.

4) உங்கள் கையெழுத்தின் கீழ் புள்ளியோ,
கோடோ கிடையாதா ?

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் .
அடுத்தவர்கள் கருத்து சொன்னால்
கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்
ஒபாமா இருப்பார் .

.
5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல்
கையெழுத்துப் போட்டால்...

கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்
சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,
கபில்தேவ்.

.
6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,
கோழி கிண்டிய மாதிரி புரியாத
கையெழுத்துப் போட்டால்...

புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,
யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .
ஒரு வரி பாராட்டுதலுக்கே
மயங்கி விடுவீர்கள் . இதில் இந்திரா காந்தி,
டாக்டர் ஜாகிர் ஹுசேன் .
.

7) முழுப் பெயரையும் பொறுமையாகக்
கையெழுத்துப் போட்டால்...

நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும் தகுந்த
மாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,
உங்கள் கருத்துக்களில் தெளிவாக
இருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன்,
மன்மோகன்சிங் இதில் அடங்குவர் .
.

வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...

அம்மாஞ்சி . பாசமாகவும்,
உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் . இந்த
வகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி,
மதர் தெரஸா .
.

9) கையெழுத்துக்குக் கீழே தேதி, வருடம்
போடுவீர்களா ?

ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்
கலை பிடிக்கும் . முடிவெடுக்க
நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த
ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி . சர்.சி.
வி.ராமன் .

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு...?

திங்கள், 30 செப்டம்பர், 2013

அன்னை தெரேசா கூறிய பெரும் வெற்றிக்கான 8 சூத்திரங்கள்.




1) எளிய கனவுகள் போதும் அவற்றை அழுத்தமாகச் சொல்லிப் பழகுங்கள்..

உங்களுடைய கனவுகளோ வாழ்க்கை லட்சியங்களோ
மிகவும் விரிவானவையாக சிக்கலானவையாக இருந்தால் அவற்றை எட்டிப்பிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும்.

ஆரம்பத்தில் மிக எளிமையான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள் அவற்றை அடைந்தபின் அடுத்த செட் கனவுகளைக் காணலாம். என்ன அவசரம்?

2) ஆனந்தமாக வாழ்வதற்குதான் எல்லோருக்கும் விருப்பம், ஆனால் அதற்குமுன்னால் நீங்கள் சில
சங்கடங்களை சந்திக்கவேண்டியிருக்கும்.

நீங்கள் ஒரு நல்ல லட்சியத்தை நோக்கிச் செல்லும்
வழியில் பல அசௌகர்யங்கள், சங்கடங்கள், தடைகள்
எதிர்ப்படலாம். அவை உங்களுகடைய பயணத்தையே
கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,

எல்லோரையும் அரவனைத்து அனுசரித்துச் செல்லுங்கள்

3) பொறுமை அவசியம் :

எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் உண்டு.. ஜெயிக்க நினைப்பவர்களுக்கு அவசரம் ஆகாது.

பொறுத்திருங்கள் சூழ்நிலை எப்படிபட்டது என்று கவனமாக யோசித்து உங்களுடைய நேரத்தையும் செயல்பாடுகளையும் திட்டமிடுங்கள்..

4)சந்தேகப்படுங்கள்:

சந்தேகம் என்றால் அடுத்தவர்கள் அல்ல உங்களை நீங்களே!,

அன்னை தெரசா தன்னுடைய எண்ணங்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

அதேசமயம் அவரிடம் அசட்டு நம்பிக்கையை கிடையாது.எதிலும் இறங்குவதற்கு முன்னால் தன்னைத்தானே சந்தேகக் குணத்துடன் கேள்விகளை கேட்டுக்கொள்வார்.

பலவிதமான பரீட்சையில் ஜெயித்து பிறகுதான் முதல் காலடியே எடுத்துவைப்பார்.அதன் பிறகு வெற்றி நிச்சயம்!

5) தனிப்பட்ட ஒழுக்கம் முக்கியம் :

எந்த வேலையும் செய்வதற்கு இரண்டு வழிகள் உண்டு. நம் இஷ்டப்படி செய்யலாம். அல்லது , இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நமக்கு என்று நமக்கு நாமே வரையறுத்துக்கொண்டு அந்த வரம்புக்குள் ஒழுக்கமாகச் செயல்படலாம்.

அன்னை தெரசா இதில் இரண்டாம் வகை..

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்கலாம். என்ன சாப்பிடலாம், எத்தனை மணிக்கு என்ன வேலை செய்யலாம், என்பதில் தொடங்கி சகலத்திலும் தனக்குத்தானேகட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு அவற்றை விடாமல் பின்பற்றியவர் அவர் முணு முணுத்துக்கொண்டு அல்ல..ஒழுங்குமுறையோடு வாழ்வதில்தான் என்னுடை சந்தோஷம் இருக்கிறது என்று சொல்லியபடி, சிரித்துக்கொண்டே!

6) எல்லோருக்கும் புரியும் மொழியில் பேசுங்கள்:

அறிவுஜீவிகள் பலர் அடுத்தவர்களுக்கு புரியாதபடி சிக்கலாகப் பேசினால்தான்பெருமை என்று நினைக்கிறார்கள்,உண்மை அதுவல்ல

7) மௌனம் பழகுங்கள்:

பல நேரங்களில், மொழிகள் கூட அநாவிசயம்.ஒரு சின்னப் புன்னகை, அன்பான முதுகுதட்டல்,பாசம் பொங்கும் ஒரு முத்தம் ,என இடத்துக்கு ஏற்ப உங்களது உடல் மொழியால் மௌனமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள், உடனடிப் பலன்கள் கிடைக்கும்.

8 ) யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள்:

பொதுவாக நாம் ஒருவரை சந்தோஷப்படுத்த நினைத்தால் இன்னொருவரை அலட்சியப்படுத்தும்படி நேர்ந்துவிடுகிறது.

இந்த பிரச்னைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி.

நமது செயல்பாடுகள் யாரிடம் என்னவிதமான தாக்கங்கள் உருவாக்கக்கூடும் என்று பல கோணங்களில் இருந்து யோசிப்பதான்.

இதற்காகச் செலவிடும் சில நிமிடங்களை வீண் என்று நினைக்காதீர்கள், அவைதான் உங்களைப் பரவலாக எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும்..

தாலி கட்டுவது எதற்காக?




தேவைதானா இதெல்லாம்? என்று கேள்வி கேட்டே பழகிவிட்ட நமக்கு, நம் முன்னோர் சிந்திக்காமல் எதையோ உருவாக்கிவிட்டார்கள் என்ற மனப்பிரம்மையும் கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கிறது.

பிறப்பிலிருந்து இறப்பு வரை பல வழக்கங்களை நம் பாரம்பரியமாக உருவாக்கி, அதை நடைமுறையிலும் சாத்தியமாக்கிய பெருமை நம் முன்னோர்களைச் சேரும். அவர்களின் புரிதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் மற்றுமொரு பதிவு…

தாலி என்பது ஒரு புனித நூல். அதனை ஒரு குறிப்பிட்ட முறையில் உருவாக்க வேண்டும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் அந்த தாலியைப் புதுப்பிக்கவும் வேண்டும். ஆனால் இன்றோ இது வழக்கத்தில் இல்லாத நடைமுறையாக மாறிவிட்டது. பெண்கள், தாலி என்று சொல்லிக் கொண்டு தடிமனாக ஒரு தங்கச் சங்கிலியைப் போட்டுக் கொள்வதே இதற்கு காரணம்.

உண்மையில் தாலி என்பது நூலில்தான் இருக்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட முறையிலான பருத்தி நூலாகவோ அல்லது பட்டு நூலாகவோ இருக்க வேண்டும். இந்த புனித நூல், சம்பந்தப்பட்ட இருவரின் சக்திநிலைகளைப் பயன்படுத்தி, தாந்திரீக வழியில் உருவாக்கப்படுகிறது.
அதாவது, ஆணின் குறிப்பிட்ட ஒரு நாடியையும் (சக்திநிலை) பெண்ணின் ஒரு குறிப்பிட்ட நாடியையும் இணைத்து, அந்த புனித நூல் ஒரு குறிப்பிட்ட வழியில் தயாரிக்கப்பட்டு பிறகு அணிவிக்கப்படுகிறது.

அதன் பின் அந்த ஆணும் பெண்ணும் உடலளவில் இணையும்போது அந்த இரு உடல்களின் இணைப்பு மட்டுமல்ல; அந்த இருவரின் சக்திநிலையும் கூட பின்னிப் பிணைந்த சங்கமமாக இருக்கும். இப்படி இருவரின் சக்திநிலைப் பிணைப்பு சாதாரணமானதல்ல.

இதுபோல் செய்யும்போது அந்த இணைப்பை, உறவை சுலபத்தில் முறிக்க இயலாது. அப்படியும் வலிய முறித்தால் குறிப்பிட்ட இருவருக்கும் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். இப்படித்தான் முன் காலத்தில் விவாகங்கள் நடத்தப்பட்டன.

இளம் வயதிலேயே, அதாவது 10, 11 வயதிலேயே விவாகங்கள் செய்து வைக்கப்பட்டன. இதுபோன்ற சக்திநிலை பிணைப்பால், அவர்களின் கவனம் தவறான வழியில் செல்லாமல் எப்போதும் பாதுகாப்புடன் காக்கப்பட்டது. இன்றைய மனிதர்களுக்கு இவை கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

அந்த உறுதியான பிணைப்பு கணவன்-மனைவி இருவருக்கும் ஒரு அபரிமிதமான சக்தியைக் ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த சக்தி ஒரு சமநிலையிலும் இருந்ததால் தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய நினைக்கிறார்களோ, அதை எந்த மனச் சிதறலும் இல்லாமல் அவர்களால் செய்ய முடிந்தது.
இவர் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்பது போன்ற பாதுகாப்பற்ற தன்மையால் அவர்கள் பாதிக்கப்படவில்லை. அந்த அளவிற்கு அவர்களிடம் உறுதியான பிணைப்பு, பந்தம் இருந்தது. இப்போது காணப்படும் பாதுகாப்பற்ற தன்மை பாரதத்திற்கு மிகவும் புதிதான ஒரு சமாச்சாரம்.

கணவன் என்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ, மனைவி என்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்கிற பாதுகாப்பற்ற உணர்வுகள் முன்பு இருந்ததில்லை. ஆனால் தற்போது தாலி அல்லது மங்கள சூத்திரம் என்பது வெறும் சடங்காகி விட்டது.
பெரும்பான்மையோர் காலையில் எழுந்தவுடன் தேடும் பொருளாகிப் போனதில் வியப்பில்லை.

நீங்கள் கட்டவிருக்கும் உங்கள் வீட்டை நீங்களே டிசைன் செயய உதவும் தளம்.





Design your house plan blueprints online with smallblueprinter, then take a 3D walkthrough your design, check out an isometric view and print out your plan.

புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் தங்களுக்கென்று பலவிதமான ஆசை கள் இருக்கும் இப்படி இருந்தால் நன் றாக இருக்குமா அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று பலவித எண்ணங்கள் தோன்றும் நம க்கு தோன்றும் எண்ணங்களுக்கு வடி வம் கொடுத்து வீடுகட்ட பிளான் உரு வாக்கி கொடுக்கிறது 

ஒரு தளம் இதை ப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வீட்டை கட்டிப்பார் திருமணம் நடத்திப் பார் என்பது பழமொழி ஆ னால் இன்று இந்த இரண்டுமே பணம் மட்டும் இருந்தால் எளிதாக செய்துவிடலாம், அந்த வகையில் இன்று புதி தாக வீடு கட்ட விரும்பு பவர்களுக்கு வீட்டுக்கா ன பிளான் (வடிவமை ப்பு) உருவாக்கி கொடு க்க ஒரு தளம் உதவுகி றது.

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Design, Isometric View , 3D Walkthrough மற்றும் Print என்ற மெனுக்களி ல் முதலில் Design மெனு திறக்கும் இதில் Blank Plan அல்லது Sample Plan என்பதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு த்துக்கொள்ள வேண்டும் அடுத்து வல து பக்கம் இருக்கும் Wall டூலை பயன் படுத்தி எங்கு சுவர் வேண்டுமோ அங்கு கொண்டுவரலாம், அதே போல் எங்கு கதவு வேண்டும் , எங்கு சன்னல் வைக் க வேண்டும் என அனைத்தையுமே நாம் இதைச் சொடுக்கி எளிதாக வைத் துக் கொள்ளலாம். Transform என்ற டூ லை பயன்படுத்தி எங்கு வேண்டுமானா லும் நகர்த்தலாம் வடிவ த்தை மாற்றி அமைக்கலாம். இதே போல் Isometric View மற்றும் 3D Walkthrough போன்றவற்றில் நமக்கு பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுக்கலாம் எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Print என்ற பொ த்தானை சொடுக்கி Print செய்யலாம். ஆரம்ப நிலையில் நாமே நம் விருப்பபடி எளிதாக பிளான் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப்பதிவு பய னுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி (More Info Links) :

Design your own house plan:

http://www.smallblueprinter.com/sbp.html

FloorPlanner :

http://www.smallblueprinter.com/floorplan/floorplan.html

Garden Planner Online:

http://smallblueprinter.com/garden/planner.html

Download an offline version:

http://www.smallblueprinter.com/download.html

திங்கள், 23 செப்டம்பர், 2013

முக்கியமான பொழுதுபோக்கு வெப்சைட்

ஒரு ஏழு வெப்சைட் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.. உங்களுக்கு இதில் எந்தத்துறை ஆர்வமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றதோ அதனை தேர்ந்தெடுத்து இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்களுக்கு போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு இருக்குமேயானால் அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள www.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.


போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ள www.deepreview.com மற்றும் photography tutorials போன்றவைகளை பயன்படுத்தலாம்.

உங்களுக்கு கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் www.codecademy.com என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.

உங்களுக்கு ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விருப்பமிருந்தால் www.opencultre.com இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.

சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் www.simplyrecipes.comமூலம் சமையல் செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.

ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள www.artyfactory.com மற்றும்www.instructables.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.

உங்கள் பாதுகாப்புக்காக தற்காப்பு போன்ற கலையையும் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்கு நீங்கள் www.lifehacker.com இணையதளத்தை பயன்படுத்தலாம்.

உங்களுக்கு நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளது என்றால் www.dancetothis.com மூலம் அதை கற்றுக்கொள்ளலாம்.

இந்து ஏழு இணைய தளமும் தன்னுடைய சேவையை முற்றிலும் இலவசமாக வழங்குகின்றது..

யாருக்கு எதில் ஆர்வமோ அதனை முயற்சித்து பாருங்களேன்..!!!

(உங்கள் நண்பர்களுடனும் இதை share செய்து கொள்ளுங்கள். பலருக்கும் இது பயனுள்ள பதிவாக இருக்கும்.)

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி பேசலாம்?

கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும் இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள். மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அது என்னென்னவென்று படித்து பாருங்களேன்...
கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்...
1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.
2. தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.

3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

  மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள்

 என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒ

ரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றி

ல் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றி

ல் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.

4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
5. அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.
எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பொதுஅறிவுக் கட்டுரைகள் - மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்




1. சிறந்த வழி

நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி - ஸ்ரீ அன்னை

2. பெருந்தன்மையே முதல் படி

1)  இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.
2)  நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.
3)  இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.
4)  தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.
- சீனப் பழமொழி

3. பயப்படாதீர்கள்

நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!
தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!
- நெப்பொலியன் ஹில்

4. மூன்று ஆயுதம் நம்மிடம்

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
- கன்ஃப்யூஷியன்

5. துணிவே துணை

ஜூலியஸ் சீசர் போல ரோமப்பேரரசராக உயர வேண்டுமா? அல்லது உங்களுக்குள்ளேயே சிறைப்பட்ட ஒரு பறவையாக வாழ வேண்டுமா? என்பது உங்களின் துணிச்சலைப் பொறுத்தே அமையும். இந்த இரண்டு முடிவுகளும், வெற்றிகளும் உங்களுக்குள்ளேயேதான் இருக்கிறது. எதைத் தேர்வு செய்து தன்முனைப்புடன் உங்களை நீங்களே வழி நடத்திச் செல்கிறீர்களோ, அது போலவே - நீங்கள் எண்ணியது போலவே - உருவாகி விடுவீர்கள். துணிச்சலுடன் உயர்ந்த இலட்சியங்களை அடைய எப்பொழுதும் முன்னோக்கியே செல்லுங்கள்.
-ஸர் டி.ப்ரௌன்

6. வெற்றிக்கு முதல்படி எது?

மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.
- டாக்டர் ஜான்சன்
( உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்தவர் சாமுவேல் ஜான்சன் 33 ஆண்டுகள் கடின உழைப்பில் வெளிவந்தது. ஆனால் இவர் இறந்து 13 ஆண்டுகள் கழித்தே முதல் பதிப்பு வெளியானது )

7. அன்பின் நோக்கம்

உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு, உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்
- ஸ்ரீ அன்னை

8. விதைத்ததைத்தான் அறுவடை செய்கிறோம்

ஒவ்வொரு மனிதனும் விதக்கிறாள். ஒருவன் வாய்ச் சொற்களால் விதக்கிறான். இன்னொருவன் செயல்களால் விதைக்கிறான்.

எல்லா மனிதர்களும் தாங்கள் விதைத்த பண்பு விதைகளுக்கு ஏற்ப கோதுமைப் பயிராகவோ அல்லது களைச் செடியாகவோ வளர்கிறார்கள்.

எதைப்பற்றியும் சிந்திக்காமல் விதைத்தவனுக்கு எந்தச் செயல் நிறைவேற்றமும் ஏற்படவில்லை.

செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு அதைத் தேடி உண்மையாக உழைத்தவனே 'வெற்றி' என்னும் நற்கனிகளைப் பெற்றவனாவன்.

பெரும்பாலான மக்கள் வயதான பிறகே தங்களின் வளர்ச்சியின்மை குறித்து அழுது புலம்புகின்றனர்.

நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எதை விதைத்தீர்களோ அதைத்தான் அறுவடை செய்கிறீர்கள்.

நல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் உங்களுக்கு வெற்றி என்னும் அறுவடை சிறப்பாக இருக்கும்.
- பார்பர்

9. அஞ்சா நெஞ்சம் வேண்டும்

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
- சுபாஷ் சந்திரபோஸ்

10. நல்ல எண்ணெய் எது?

மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தில் கொடுமையான துன்பம் தருகிற கதை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொறு மனிதனும் 'துணிவு' என்ற எண்ணெயை தன்னுடைய சக்கரத்திற்கும், மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும் போட வேண்டும் அப்போது தான் எல்லாச் சக்கரங்களும் இணைந்து முன்னேறும்.
- அய்டா 


11. ஓய்வு எடுங்கள் 

'திடும்' எனப் பொங்கிச் செயலாற்றும் கடல் நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன. மனிதனும் இதுபோல், வாழ்க்கைப் போர்க்களமாக இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு ஓய்வுடன் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும்போது கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
- டப்ஃபீல்டு

12. எளிமைதான் முன்னேற்றம்

எளிமையாக இருங்கள். எளிமைதான் உன்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில் தான் அடங்கி இருக்கிறது. நல்லவற்றிற்கு உடனே நம் மனதைத் திறக்கவும், கெட்டதற்கு உடனடியாகவும் நம் மனக்கதவை மூடக்கூடிய சக்தியும், எளிமையாக வாழும்போதுதான் கிடைக்கும். எளிமையாக வாழத்தான் நமக்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அது இருந்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம்.
- ஜே.ஆர்.லோவெல்

13. அன்பை அனுப்புங்கள் 

அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள். அதைப் பயன்படுத்துங்கள். மாமிசம் சாப்பிடாத பழக்கம் உங்கள் அன்பிலிருந்து மலர்ந்திருந்தால் அது ஓர் அற்புதமான விஷயம். அகிம்சை, அன்பின் காரணமாக மலர்ந்தபோது பரம தர்மமாகிறது. மத நூல்களைப் படித்து ஒரு சம்பிரதாயத்தை ஏற்று மலர்ந்ததென்றால், அது ஒரு தர்மமல்ல! ஒருவருடைய தோளில் நீங்கள் கைவைத்தால், உங்களது இதயத்தின் அன்பு முழுவதையும் உங்கள் கையின் மூலம் அவருக்கு அனுப்புங்கள். உங்களது முழு உயிரையும் முழு இதயத்தையும் அந்தக் கையில் இணையச் செய்து போகவிடுங்கள். அந்தக் கை மாயமாக வேலை செய்வதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.

ஒருவரது கண்களைச் சந்திக்கும்போது உங்கள் கண்களில் உங்கள் இதயம் முழுவதையும் கொட்டி விடுங்கள்.
கண்கள் மந்திரம் மாயம் அடைந்து ஒருவருடைய இதயத்தை அசைத்து விடுவதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.
உங்கள் அன்பு விழிப்படைவது மட்டுமல்ல, மற்றவரது அன்பு விழிப்படைவதற்கும் வழி வகுப்பதாகி விடலாம்.
சரியான முறையில் அன்பு செலுத்தும் மனிதன் ஒருவன் பிறந்தால் இலட்சக்கணக்கான மனிதர்களின் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்கத்   துவங்கிவிடும்!.
- ஓஷோ ரஜனீஷ்

14. சூரிய ஒளி போல

யாருடன் பழகினாலும் அந்தஸ்து பார்க்காமல் ஒரே மாதிரியான அணுகுமுரையுடன் உள்ளன்பு குறையாமல் பழகுங்கள்.
- ரீடர்ஸ் டைஜஸ்ட்

15. வாய்மை வெல்லும் 

தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு
மனித சக்தியும் நிற்க முடியாது! (எனவே, சோதனையான நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்).
- ஸ்ரீ அன்னை

16. பிரார்த்தனை செய்யலாமா?

இறைவன் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால், பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும் இணைக்கிறது
- மாட்டிகாஸ் பெரீன்

17. நல்ல எண்ணமே சிறந்தது

நாம் நமது எண்ணங்களின் மீது கவனம் வைக்க வேண்டும் கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான திருடர்கள்.
- ஸ்ரீ அன்னை

18. எல்லா உயிர்களையும் நேசியுங்கள்
அன்பு நிறைந்த ஒருவர், மனிதர் படும் துன்பங்களைக் காட்டிலும், விலங்குகள் படும் துன்பத்தைச் சகித்துக் கொள்ளமாட்டார்.
- ரோமெயின் ரோலந்து

( தெரு நாய்களுக்கு உணவளித்து உங்களைச் சுற்றி எப்போதும் அன்பான அதிர்வுகளையே பாதுகாப்பாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் ஆத்மாவாக எளிதில் உயர்வீர்கள்)

19. இயற்கை நமது நன்பன்

மனிதன் சில சமயங்களில் தான் தேடாதவற்றைக் கூடக் கண்டுபிடித்து விடுகிறான்
 - அலெக்ஸாண்டர் ஃப்ளெயிங்

( தியானம் செய்யும் பழக்கத்தால் இந்த சக்தி நமக்குக் கிடைக்கிறது)


20. சிந்தனைக்கு

நாம் அறிந்துள்ளவைகளுக்கு அப்பால் ஒரு அறியும் சக்தி நம்முள் உள்ளது. நமது சிந்தனைகளை விட நாம் உயர்ந்தவர்கள்.
- ஸ்ரீ அன்னை

( எனவே, இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து நேர்வழியில் வாழ்வோம்)

21. அன்பை வெளிப்படுத்துங்கள்

அன்பு விஸ்வமயமானது. நித்தியமானது. அது, என்றும் தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது. அது ஒரு தெய்வ சக்தியாகும். அதன் புறவெளிப்பாட்டின் அடையாளங்கள் எல்லாம் அதன் கருவிகளைச் சார்ந்தவை. அன்பு எங்கும் வியாபித்திருக்கிறது. அதன் இயக்கம் தாவரங்களிலும் காணப்படுகிறது. விலங்குகளிடத்திலும் அது செயல்படுகிறது. கற்களிலும் அதைக் காண முடியும்.
- ஸ்ரீ அன்னை

22. வாழ்வின் வெற்றி

வாழ்வின் வெற்றி என்பது ஒரு மனிதன் பின்பற்றும் சத்தியத்தைப் பொறுத்தது.
- ஸ்ரீ அன்னை

23. தரமே தங்கக்குணம்

முதல் விதியாக இலட்சியத்தில் உறுதியில்லாமல் இருக்கலாம். ஆனால், இலட்சிய உறுதி வேண்டுமெனில் முதல் தரமான மூன்று அம்சங்கள் தேவை. அஞ்சாமை, துணிவு, விடாமுயற்சி எனும் இந்த மூன்றும் இருந்தால் முதல் விதி நம்மிடம் இருந்து இலட்சியத்தை வெற்றிபெறச் செய்யும்.
- ஸ்ரீ அன்னை

24. எது உயிர் மூச்சு?

நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும் சூரிய ஒளி, ஊதா ஒளி மற்றும் உயிர்களின் வளர்ச்சியைப் போல் முக்கியமானதாகும்.
- நார்மன் வின்சென்ட்டில்

25. அன்பின் சக்தி

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும். அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
 - புனித பைபிள் கொரிந்தியர் 1:13

26. அன்பு மயமாக இருங்கள்

அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது. புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார்
- ஓஷோ ரஜனீஷ்

27. மனஉரம் வேண்டும்

கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில் எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடுவான். அவனைத் தனியாகப் போரிடச் சொன்னால் கண்டிப்பாகத் தோற்றுவிடுவான். ஒவ்வொறு தனிமனிதனும் குறிக்கோளை அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும்.
- ஜார்ஜ் எலியட்

28. யோசனை கூறும் தகுதி

யார் யார் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் நமக்கு அறியும் ஆலோசனைகளையும் புகட்ட உரிமை உள்ளவர்களே.
- ஜார்ஜ் எலியட்

29. உறுதி
மனிதன் எதை உறுதியாக நினைக்கிறானோ அதுவாகவே அவன் மாறிவிடுவான்.
- புனித பைபிள்


30. உதவி கிடைக்க

நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.
- ஸ்ரீ அன்னை

"கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்" என்ற பாடலுக்கு ஏற்ப கண்களுக்கு மாய தோற்றத்தை தருகின்ற படங்களைக் காணலாம்.

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்" என்ற பாடலுக்கு ஏற்ப கண்களுக்கு மாய தோற்றத்தை தருகின்ற படங்களைக் காணலாம். 



 இப் படமானது நெளிவது போல தோன்றும். உண்மையில் இது நிலையான படம்


ட்டத்தில் உள்ள வெள்ளைப் புள்ளியை பார்க்கும் போது அருகில் உள்ள வெள்ளைப் புள்ளி கருப்பாக தோன்றும்.
 உங்கள் வலது மூளை நிறங்களைக் கூற முற்படும். ஆனால் இடது மூளை வார்த்தையைப் படிக்க முற்படும்.

 இப் படமானது நெளிவது போல தோன்றும். உண்மையில் இது நிலையான படம்.

 இப் படமானது சுற்றுவது போல தோன்றும். உண்மையில் இது நிலையான படம்.


 இப் படமானது சுற்றுவது போல தோன்றும். உண்மையில் இது நிலையான படம்.


 இதன் மேற்பரப்பினைக் கண்டுபிடிக்கவும். 

 இப் படத்தின் நடுவில் உள்ள கட்டமானது நெளிவது போல தோன்றும். உண்மையில் இது நிலையான படம்.



 கட்டங்கள் சமமானதே. ஆனால் சமமற்றதாக தோன்றும்.




மேலே உள்ள முக்கோணதில் காணப்படும் வடிவங்களை மாற்றி அதே அளவிலான முக்கோணத்தை அமைக்கும் போது இடைவெளி உருவாகிறது. எப்படி 

பாண்டிய நாட்டில்  உள்ளது  பிசிர்  என்ற  ஊர்.ஆந்தையார்  என்பது  இவரது  இயற்பெயர்.ஆதலால்  பிசிராந்தையார்  என்று  அழைக்கப்பெற்றார்.  இவர்  சோழ  மன்னன் கோப்பெருஞ்சோழன்  மீது  அன்பு  கொண்டு  அவனைப்  பற்றிய  பாடல்களைப்  பாடியுள்ளார்.சோழனைக்  காணவேண்டும்  என்னும்  பேரவா  கொண்டிருந்தார்.  ஆனால்  பாண்டிய  நாட்டிலுள்ள  பிசிர்  வெகு  தொலைவு  உள்ளதால்  இவரால்  சோழ  நாட்டுக்குச்  செல்ல  இயலவில்லை.

இவரது புகழையும்  தமிழையும்  கேள்விப்பட்ட  சோழனும்  இவரைக்  காணவேண்டும்  என்னும்  அவா  கொண்டிருந்தான்.  எனவே  இருவரும்  உயிர்  ஒன்றாகவும்  உடல்  வேறாகவும்  வாழ்ந்து  வந்தனர். இருவரும்  தாம் ஒருவருக்  கொருவர் சந்திக்கும்  திருநாளை  ஆவலுடன்  எதிர்  பார்த்துக்  கொண்டிருந்தனர்.

கோப்பெருஞ்சோழனின்  தலைநகர்  உறையூர்.  இம்மன்னன்  பிசிராந்தையாரை  நேரில்  காணாமலேயே  அவருடன்  நட்புக் கொண்டவன்.  இவனது  ஆட்சி  நடந்துகொண்டிருக்கும்  போதே  இவனது  இரண்டு  புதல்வர்களும்  சோழ  ஆட்சிக்  கட்டில்  ஏறுவதற்காக  தந்தையுடன்  போரிடத்  துணிந்தனர்.

இதை  அறிந்த  கோப்பெருஞ்சோழன்  ஆட்சியை  விட்டு  வடக்கிருந்து  உயிர்  விடத்  துணிந்தான்.  அப்போது  தன்  மந்திரியிடமும்   மற்றையோரிடமும்   பிசிராந்தையார்  என்னைக்  காண  வருவார்.  என்னுடன்  வடக்கிருப்பார்.  அவருக்கும்  ஓர்  இடத்தைத்  தயார்  செய்யுங்கள்  எனக்  கூறினார்.    அதேபோல்  பிசிராந்தையாருக்கும்  ஒரு  இடம்  அமைக்கப்பட்டது.  நாட்கள்  கடந்தன.  சோழன்    பிசிரந்தையாரைக்  காணாமலேயே  வடக்கிருக்கத்  துணிந்தான்.   எப்படியும்  ஆந்தையார்  வந்து  விடுவார்  எனக்  கூறித்  தன்  தவத்தை  மேற்கொண்டான்.   

இவ்வுலக  வாழ்வைத்  துறக்க  விரும்பும்  மன்னவர்  வடக்கிருந்து  உயிர்  விடுதல்  அக்கால  மரபு.  வடக்கிருத்தல்  என்பது  தன்நாட்டில்  உள்ள  ஆறு  குளம்   போன்ற    நீர்  நிலைக்குச்  சென்று  அதன்  இடையே  மணல்  திட்டு  ஒன்றை    அமைத்து   வடக்கு  திசை  நோக்கி  அமர்ந்து  உண்ணாநோன்பிருந்து  உயிர்  விடுதல்.

தன்  மக்கள்  மீது  இருந்த   மனக்  கசப்பின்  காரணமாக  கோப்பெருஞ்சோழனும்   வடக்கிருந்தான்.
இதனைக்  கேள்விப்பட்டார்  பிசிராந்தையார்.  உடனே   சோழ  நாட்டை  நோக்கி  ஓடி  வந்தார்.
வழியில்  எதிர்ப் பட்டவர்  இவரைப்  பார்த்து  மிகவும்  ஆச்சரியப்  பட்டனர்."புலவரே!  நான்  என்  சிறுவயது  முதலே  தங்களைப்  பற்றி  என்  தந்தையார்   கூறக்  கேட்டிருக்கிறேன்.  தங்கள்  மிகவும்  வயதானவராக  இருப்பீர்கள்  என்று  எண்ணியிருந்தோம்.  தங்களோ  மிகவும்  இளமையாக  இருக்கின்றீர்களே, அது  எப்படி?"என்று  வியந்து  கேட்டனர்.  அதற்கு  மறுமொழியாக  ஆந்தையார்   ஒரு  பாடல்  பாடினார்.  புறநானூற்றில்  உள்ள  இப்பாடல்  நமது  வாழ்வியலுக்கு  மிகவும்  தேவையான  ஒன்று.

         " யாண்டு  பலவாக  நரையில வாகுதல்
          யாங்காகியர்  என வினவுதிராயின்,
           மாண்ட  என்  மனைவியொடு  மக்களும்  நிரம்பினர்
           யான்  கண்டனையர்  என்  இளையரும்   வேந்தனும்
          அல்லவை  செய்யான்   காக்கும்  அதன்  தலை
           ஆன்று  அவிந்து  அடங்கிய  கொள்கைச்
           சான்றோர்  பலர்  யான்  வாழும்  ஊரே."    

என்று  பாடிய  பாடல்  மூலம்  " வயோதிகரானாலும்  இளமையோடிருக்கும்  காரணத்தைக்  கேட்பீரானால்   சிறந்த  பண்புள்ள  மனைவி,  மக்கள்  குறிப்பறிந்து  பணி  செய்யும்  பணியாளர்கள்  அறத்தையே  நாடிச்  செய்யும்  மன்னன்  இத்துணை  பேருடன்  நன்கு  கற்று    நல்ல  பண்புகளுடன்  விளங்கும்  சான்றோர்  பலரும்  எம்மைச்  சூழ்ந்து  இருக்க  நான்  வாழ்வதால்  எனக்கு  நரை  தோன்றவில்லை.  மூப்பும்  எம்மை  அணுகவில்லை."   என்று  விளக்கினார்.   

சோழனின்  இறுதி  நேரம்  வந்துற்றபோது  பிசிராந்தையார்  ஓடிவந்தார்.  நண்பனைக்  கண்டார்  தனக்காக த்  தயாராக  அமைக்கப்பட்ட  இடத்தில்  வடக்கிருந்து  சோழனுடன்  தானும்   தன்  இன்னுயிர்  விடுத்தார்.

இச்செய்தியை    இக்காட்சியைக்  கண்ட   பொத்தியார்  என்னும்  புலவர்   தன்  பாடலில்  இதனைக்  கூறுகிறார்.

      "இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
       இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
       வருவன்  என்ற  கோனது  பெருமையும்
       அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
       வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே."

பிசிராந்தையார்  என்ற  புலவரும்  கோப்பெருஞ்சோழன்  என்ற  மன்னனும்  தம்முள்  காணாமலேயே  நட்புக்  கொண்டு  ஒன்றாக  உயிர்  நீத்த  இச்சிறப்பினை  இலக்கியங்கள்  நமக்கு  எடுத்து  இயம்புகின்றன.  இத்தகு  நண்பர்களை  நம்மால்  மறக்க  இயலுமா?

தென்னாலிராமன்

அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். 

மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர். 

தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னார். 

இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார். 


சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான். 

தத்துவஞானியைப் பார்த்து, "ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?" எனக் கேட்டான். 

அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான். 

அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று. 

அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டளை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார். 

வியாழன், 19 செப்டம்பர், 2013

காலத்தின் ஜாலம்



ஜன்ஸ்டீன் காலக் கோட்பாட்டை  விளக்கியபோது உலகமே அதிர்ந்தது .ஏனெனில் காலம் சாசுவதமானது .........அதாவது நிலையானது என்று அதுவரை எல்லாரும் எண்ணினர்.
காலமும் கூடக் கூடியது -குறையகூடியது .காலம் இல்லாத நிலையும் உண்டு என்று தெரிய வந்ததும் அதுவரை இல்லாத பூதிக கோட்பாடுகள் அனைத்தும் சிதறின.
ஜன்ஸ்டீன் கூறினார்"வினாடிக்கு லட்சக்கணக்கன கிலோ மீட்டர் வேகத்தில் ஒருவன் நட்சத்திரங்களை நோக்கி செல்கிறான் அப்போது அவனுக்கு 30 வயது .அவனக்கு 1 வயதில் குழந்தை  இருக்கிறது.ஓராண்டு கழித்து அவன் விண்வெளி பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பும்போது அவனுக்கு 31 வயதுதான் ஆகி இருக்கும்.அதே நேரம் அவன் மகனுக்கு 60 வயது ஆகி இருக்கும்.இதனை கேட்க்கும் எல்லாருக்குமே இது எப்படி சாத்தியம்?என்ற பிரமை ஏற்படும் .அனால் ரெயில் வண்டி  கற்பனை கணக்கிட்டால் அதை நிருபித்து காட்டினார் அவர்.அதன் பின்னரே விண்வெளி பயணத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்ப்பட்டது.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

படித்ததில் பிடித்தது

பெண்களை வாடி போடி என்றும்..
வாமா போமா என்றும்
வாடா போடா என்றும்
பா என்றும்
செல்லம் குட்டி என்றும் அழைப்பது அனைத்துஆண்களின் வழக்கமாக இருக்கிறது.

இதையெல்லாம் என்ன அர்த்தத்தில் அவர்களை அப்படி அழைக்கிறோம் என்று அநேகம் பேருக்கு தெரிவதில்லை.
(மா..டி..பா..டா..குட்டி..செல்லம்)
இதற்க்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது.

மா என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக நினைத்து,

பா என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக நினைத்து,

டா என்று அழைப்பது அவர்களை தன் தோழனுக்கு நிகராக நினைத்து (தனக்கு நிகராகவும் நினைத்து தான்) அதாவது ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில்,

குட்டி என்றுஅழைப்பது குழந்தைக்கு நிகராகவும்

செல்லம் என்று அழைப்பது தன்னுடைய அன்புக்கு நிகராகவும
அழைக்கிறார்கள்்.

ஆனால் டி என்ற வார்த்தை தன்னுடைய மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும்.

அதனால் தான் நான் பெண்களை வாடி போடி என்று அழைப்பதில்லை.

அந்த எழுத்து என் மனைவிக்கானது..அதை நான் மற்ற பெண்களிடம் பயன்படுத்த விரும்பவில்லை.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

முக்கியமான தொலைப்பேசி எண்கள்

நமது மொபைல் போனில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான தொலைப்பேசி எண்கள்.....!
*****************************************

அவசர உதவி அனைத்திற்கும்————–911
வங்கித் திர
ுட்டு உதவிக்கு ——————9840814100
மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
போலீஸ் SMS :- ———————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103
போலீஸ் : —————————————–100
தீயணைப்புத்துறை :—————————-101
போக்குவரத்து விதிமீறல——————–103
விபத்து :——————————————–100, 103
ஆம்புலன்ஸ் : ———————————–102, 108
பெண்களுக்கான அவசர உதவி : ———–1091
குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098
அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
கண் வங்கி அவசர உதவி : ——————-1919
விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்..

நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்......!!

இதில் யாரு கொள்ளைக்காரன் ??

ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கும் பொழுது கொள்ளைக்காரன் " யாரும் நகராதீர்கள், பணம் நாட்டின் உடையது, உங்கள் உயிர் உங்களுடையது " என்றான்..

எனவே அனைவரும் அமைதியாக இருந்தனர், இது தான் "மனம் மாற்றும் கருத்து ".

ஒரு பெண் மேசையில் படுத்திருந்தாள், ஒரு கொள்ளைக்காரன் "நங்கள் கற்பழிக்க வரவில்லை கொள்ளையடிக்க வந்திருக்கிறோம், ஒழுங்காய் கீழே உக்காரு " என்றான்.

இது தான் "தொழில் முறை யுக்தி", கவனம் சிதறாமல் இருப்பதற்கு.

கொள்ளையடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது ஒருத்தன் கேட்டான் "எவ்வளவு பணம் இருக்குது னு எண்ணுவோம்".

இன்னொருவன் " அட முட்டாளே, டிவி'ல நியூஸ் போடுவாங்க அதுல பாத்துக்கலாம்" என்றான்.

இது தான் "அனுபவம்" என்பது, திறமைகளை விட பெரியது.

அவர்கள் கொள்ளை அடித்து சென்ற பிறகு வங்கி மேலாளர், ஊழியரிடம் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள் என்றார், ஆனால் அவன் "நாம ஒரு 10 கோடி எடுத்துட்டு, மொத்தம் 50 கோடின்னு கணக்கு சொல்லிடலாம்" என்றான்.

இது தான் "அலைகளை நோக்கி நீந்து" என்பது.

அதை கேட்டு மேலாளர் சொன்னார், "மாதா மாதம் கொள்ளை நடந்தால் நல்லா இருக்கும்"

இது தான் "அலுப்பின் வெறுப்பு", வேலையை விட சொந்த சந்தோசம் தான் முக்கியம் இவர்களுக்கு.

மறுநாள் டிவி'யில் 100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது என்று செய்தி வந்தது. அந்த கொள்ளைக்காரன் ஆக்ரோஷத்துடன் "நாங்கள் உயிரை பணயம் வைத்து 30 கோடி தான் கொள்ளை அடித்தோம், ஆனால் அவர்கள் 70 கோடி கொள்ளை அடித்துவிட்டனர், கொள்ளை அடித்தவனை விட படித்தவனே மிக கேவலமாக நடந்து கொள்கிறான்"

இதுவே "அறிவு தங்கத்துக்கு நிகரானது" என்று சொல்லப்படுகிறது.

அந்த வங்கி மேலாளர் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார், கொள்ளை சம்பவத்தால் தான் இழந்த பங்கு சந்தையை மீட்டார்.

இது தான் "வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது".

இப்பொழுது சொல்லுங்கள்,  இதில் யாரு உண்மையான கொள்ளைக்காரன் ??

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

இன்றைய தலைமுறையிடம் தொலைந்த வாழ்க்கைமுறை

குருவிகளின் சத்தம் கேட்டு காலை பொழுதில் கண் விழித்ததுண்டா?

கம்மாக்கரை தண்ணீரில்கால் நனைத்ததுண்டா?

காத்தாட வரப்பின் மேல் நடந்ததுண்டா?

முட்டி முட்டி பால் குடிக்கும் கன்று குட்டியை ரசித்ததுண்டா?

கொய்யாவை கொத்தி திண்னும் அணிலை ரசித்ததுண்டா?

மாலையில் மலரும் மல்லிகையை முகர்ந்ததுண்டா?

இரட்டை மாட்டு வண்டியின் சலங்கை சத்தத்திற்கு தாளம் போட்டதுண்டா?

நடவு நடும் அக்காக்களின் எசப்பாட்டு கேட்டதுண்டா?

ஏர் பிடிக்கும் அண்னண்களின் பின்னால்நடந்ததுண்டா?

கொட்டும் மழையில் குடையில்லாமல் நனைந்ததுண்டா?

மண் வாசனையில் தண்னிலை மறந்ததுண்டா?

வாசலில் ஓடும் மழை நீரில் காகித கப்பலும் கத்திக் கப்பலும் விட்டதுண்டா?

பாசமாய் வளர்த்த ஆட்டுக் குட்டி அடிபட்டபோது அதற்காக அழுததுண்டா?

ஆலம் விழுதில் ஊஞ்சல் ஆடியதுண்டா?

அரச இலையில் பீப்பி செய்து ஊதியதுண்டா?

பாலைப்பூ காத்தாடி தெரியுமா?

சப்பாத்திகள்ளி பழம் திண்னதுண்டா?

கம்மஞ்சோற்றின் வாசம்தெரியுமா?

அம்மா அடிக்க கை ஓங்கும் போது ஓடிப்போய் தாத்தாவின்வேட்டிக்குள்ளும்  பாட்டியின் முந்தானைக்குள்ளும் ஒளிந்ததுண்டா?

அக்கா, அண்ணனோடு விளையாடும் போது வேண்டும் என்றே தோற்று நம் வெற்றியை கொண்டாடும் பாசத்தை அனுபவித்ததுண்டா ?

அத்தைமார்களின் மாமன்மார்களின் சீண்டல்களால் சினுங்கியதுண்டா ?

ஊர் பேர் தெரியாத வழிபோக்கனுக்கு உணவிட்டு அவன் பசியாறிய முகம் கண்டு மகிழ்ந்ததுண்டா?

பாட்டியின் மடியில் படுத்து பழங்கதைகள் கேட்டதுண்டா?

தாத்தாவின் மீசையை முறுக்கியதுண்டா ?

இரவில் நிலவின் ஒளியில் உருண்டை சோறு திண்னதுண்டா?

இவற்றையெல்லாம் அனுபவிப்பேயானால  நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்.....
இல்லையனில் ரத்தமும் சதையுமான உணர்வற்ற, பணத்திற்காக நடமாடும்எந்திரம்
கோட்டும் சூட்டும் போட்டுகொண்டு குளிக்காமல் சென்ட் அடித்துக்கொண்டு பணம்சம்பதிப்பது மட்டுமே மகிழ்ச்சியான வழ்க்கைஇல்லை
அதையும் தாண்டி நாம் கண்டுகொள்ளாமல் விட்டஉறவுகளும் உணர்வுகளும் காத்துக்கொண்டிருக்கிறது நம் அன்பிற்காக...
பழமையில் தான் பசுமை இருக்கிறது
பாசம்மணக்கும் உறவும் இருக்கிறது....

சனி, 31 ஆகஸ்ட், 2013



1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!


2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.